in

நடிகர் நெப்போலியன் மகனுக்கு டோக்கியோ…வில் திருமணம் முடிந்தது


Watch – YouTube Click

நடிகர் நெப்போலியன் மகனுக்கு டோக்கியோ…வில் திருமணம் முடிந்தது

 

நடிகர் நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என இரு மகன்கள் உள்ளனர்.

இதில் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கு சிறுவயதிலிருந்தே மஸ்குலர் டிஸ்டிராபி என்ற அரிய நோய் இருந்தது. இந்த நோய் ஒரு கட்டத்தில் தீவிரமடைந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனுஷால் நடக்க முடியாமல் போனது. மகனுக்கு தேவையான மருத்துவ வசதிகள் அமெரிக்காவில் இருந்ததால், குடும்பத்துடன் அமெரிக்கா சென்று குடியேறினார்.

நெப்போலியன் மகன் மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பது யூடியூபர் இர்பான் சில ஆண்டுகளுக்கு முன்பு நெப்போலியனின் வீட்டிற்குச் சென்று வெளியிட்ட வீடியோ முலம் தெரிய வந்தது.

அமெரிக்காவில் இருக்கும் நெப்போலியன் தன்னுடைய மகன் தனுஷ்…க்கு அங்கு திருமணம் செய்தால் குடியுரிமை பிரச்சனை வரும் என்று ஜப்பானில் திருமணம் நடத்த முடிவு செய்து. குடும்பத்துடன் கப்பலில் ஜப்பானுக்கு பிரயாணம் செய்து பல கோடி செலவு செய்து இன்று காலை தனுஷுக்கும் திருநெல்வேலி..யை சேர்ந்த அக்ஷயா ..வுக்கும் பாரம்பரிய முறை படி மாலை மாற்றிக் திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்தார்.

தனுஷின் தாய் சுதா தாலியை எடுத்துக் கொடுக்க இந்த திருமணம் பல பிரச்சனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் இடையே நல்லபடியாக முடிந்தது. இவர்களின் திருமணத்தை ஜப்பானில் நடத்த வேண்டும் என்பது தாய் சுதா..வின் ஆசையாம் எல்லா பிளான்..னையும் பக்காவாக போட்டு கொடுத்தது தனுஷ் தானாம்.

இவர்களின் திருமணத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் டோகியோ ..வுக்கு சென்றுள்ளனர். கலா மாஸ்டர், மீனா, குஷ்பூ, நடிகர் கார்த்தியும் திருமணத்தில் பங்கேற்று மணமக்கலை வாழ்த்தினர்.

இவர்களின் திருமண புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நேற்று நடந்த பந்தக்கால் நடு விழாவில் பாரம்பரிய உணவுகளை ஜப்பானில் கொடுத்து அசத்தியுள்ளார் நெப்போலியன்.


Watch – YouTube Click

What do you think?

Manners இல்லையா உனக்கு சௌந்தர்யா..வை திட்டிய தீபக்

எங்களுக்கு தெரியாமலே கல்யாணத்தை முடிவு செய்து விட்டனர்