நடிகர் நேத்ரனின் இறுதி நாட்கள் பற்றி மனைவி தீபா
சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோய் காரணமாக அண்மையில் இறந்தார்..
அவரின் இறப்பு குறித்து அவரின் மனைவி தீபா சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். நேத்ரனுக்கு அடிக்கடி வயிற்று வலி வந்தது. வலியின் தீவிரதால் இரவில் தூக்கமும் தொலைந்தது.
இதனால் அவருக்கு ஸ்கேன் எடுத்த போது, வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வந்தது. நிதி நிலை காரணமாக நாங்கள் அவரை அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை …இக்கு அழைத்து சென்றோம் அவருடைய வயிற்றுப் பகுதியை கிட்டத்தட்ட 80 சதவீதம் அகற்றிவிட்டு கணையத்துடன் இணைத்து விட்டனர்.
கீமோதெரபி கொடுத்ததால் நேந்திரன் எப்பொழுதும் சோர்வாக இருப்பார், 70 கிலோ இருந்த அவர் 38 கிலோ ..வாக குறைந்து விட்டார், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தபோது கடைசி நாட்களில் அவர் படுக்கையில் தான் இருந்தார்.
வயிற்று வலி அதிகமாகும் போது எங்களிடம் அதிகமாக கோபப்படுவார் வலி தீவிரமடைந்து நடக்க முடியாத நிலையில் அவரை நாங்கள் மருத்துவமனையில் அனுமதித்தோம் அவருக்கு ஆக்சிஜன் குறைந்ததால் செயற்கை சுவாசம் கொடுத்த மூன்று மணி நேரத்தில் அவருக்கு உயிர் பிரிந்தது.
நான்கு ஆண்டுகளாக வயிற்று வலி துடித்தவருக்கு, ஆரம்பத்திலேயே ஸ்கேன் எடுத்திருந்தால் நேத்ரனைக் காப்பாற்றி இருக்கலாம். பெரிய தவறு செய்துவிட்டோம் என நடிகை தீபா கண்ணீருடன் கூறினார்.