in

“லப்பர் பந்து” படத்தின் நடிகர் கைது..!?


Watch – YouTube Click

“லப்பர் பந்து” படத்தின் நடிகர் கைது..!?

 

சென்னையைச் சேர்ந்த 16 வயது சிறுவன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், விருகம்பாக்கம் பூங்காவில் விளையாடச் சென்றபோது, அங்கு வந்த ஒரு இளைஞன் சிறுவனிடம் பேசிவிட்டு, “ஐ லவ் யூ, அண்ணா” என்று கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

பயந்துபோன சிறுவன் அங்கிருந்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொன்னதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த இளைஞரைத் தேடி வருகின்றனர்.

பின்னர், விருகம்பாக்கம் பூங்காவில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நபர் மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் உடனடியாக ஹரியைக் கைது செய்து விசாரித்ததில், பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.

ஹரி பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக பணியாற்றி வருகிறார். பூங்காவிற்கு வரும் சிறுவர்களை குறிவைத்து, “எல்லை மீறும் வகையில் நடந்து கொண்டது தெரியவந்துள்ளது. அதேபோல், தன்னுடன் நடிக்க வந்த பல துணை நடிகைகளுடன் காதல் வயப்பட்டதாக ஹரி கூறியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, போலீசார் ஹரியின் செல்போனை பறிமுதல் செய்து, அவர் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்களில் ஈடுபட்டாரா என்று விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஹரி, லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

முன்னணி நடிகர்களின் சம்பளத்தை குறைக்க வேண்டும்

CCL 2025…. சென்னை ரைனோஸ் Vs பெங்கால் டைகர்ஸ் மோதல்