நகைகள் காணவில்லை என்று போலீஸ்..இல் புகார் கொடுத்த நடிகர் பார்த்திபன்
பன்முகத் திறமையாளர் ஆன நடிகர், இயக்குனர், தயாரிப்பாளரான பார்த்திபன் சென்னை நந்தவனத்தில் வசித்து வருகிறார்.
அவர் வீட்டின் கீழே தளத்திலே அலுவலகமும் இருக்கிறது. இவருடைய அலுவலகத்தில் இருந்து திடீரென்று 12 சவரன் நகைகள் காணவில்லை என்று நேற்று சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பார்த்திபன் புகார் செய்தார்.
மேலும் தன்னுடைய உதவியாளர் கிருஷ்ணகாந்த் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார். தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பையில் பன்னிரண்டு சவரன் நகைகள் போட்டு வைத்திருந்ததாகவும் அது தற்பொழுது காணவில்லை என்றும் கூறினார்.
அவர் அலுவலகத்தில் வேலை செய்யும் 10 பேர் பேரில் ஆறு பேரிடம் போலீசார் விசாரணை செய்தனர். இதில் கிருஷ்ணா காந்தியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் புகாரை பார்த்திபன் ஏன் திடீரென்று வாபஸ் பெற்றார் என்று தெரியவில்லை.
மேலும் சில ஆண்டுகளுக்கு முன்புகூட தன்னுடைய வீட்டில் இருந்து நகைகள் காணவில்லை என்று பார்த்திபன் புகார் அளித்திருந்தார்.