புதுவை அமைச்சருடன் நடிகர் பார்த்திபன் தீடிர் சந்திப்பு
நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் நேற்று புதுச்சேரி வந்து சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சந்தித்து பேசினார்.
அதன்பிறகு நிர்பர்களிடம் சந்திப்பின் காரணத்தை விளக்கியவர்…. நான் புதுவையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் இயக்க இருக்கிறேன் அதனால் அமைச்சரிடம் உதவி கேட்க வந்தேன் முழுக்க முழுக்க காதல் கதையான பார்த்திபனின் 54 வது படமான மயிலிறகு படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார்.
விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டதற்கு புதிதாக அரசியலுக்கு வருபவர்களை ஊக்குவிக்க வேண்டும் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அதில் தப்பு கிடையாது விஜய் தடைகளை தாண்டி பெரிய இடத்திற்கு செல்லலாம், ஆட்சியைப் பிடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல ஆளுங்கட்சியை விமர்சித்தால் தான் அடுத்த இடத்திற்கு வர முடியும் எம்ஜிஆரும் கருணாநிதியும் அதைத்தான் செய்தார்கள் அதை விட்டுவிட்டு பாராட்டிக் கொண்டிருந்தால் தலைவராக முடியாது அதனால் நான் விஜய்க்கு ஆதரவாகவும் இருக்கிறேன் என்று கூறவும் முடியாது.