in

நடிகர் பிரதீப் கே விஜயன் மறைவு


Watch – YouTube Click

நடிகர் பிரதீப் கே விஜயன் மறைவு

சொன்னா புரியாது என்ற படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் பிரதீப் கே விஜயன்.

அதன்பிறகு இவர் நடிப்பில் ஒரு நாள் கூத்து, மீசைய முறுக்கு, தமிழ்க்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற பல படங்களில் நடித்தவர்.

இவர் கடைசியாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் நடித்தவர்.

சென்னை பாலவாக்கத்தில் தனியாக வசித்து வந்த இவரை இரண்டு நாட்களுக்கு முன் நண்பர்கள் தொலைபேசியில் அழைத்தபோது போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்து அவரது வீட்டுக்கு சென்ற போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தால் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

போலீசார் வீட்டை உடைத்த போது உள்ளே விஜயன் இறந்து கிடந்தது தெரிய வந்தது 38 வயதாகும் இவரின் இறப்புக்கு காரணம் திடீர் மாரடைப்பு என்று கூறப்படுகிறது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் தடைக்காலம் முடிந்து மீன்பிடித் தொழிலை மீனவர்கள் இன்று தொடங்கினர்

Thug Life பட பிடிப்பில் விபத்து