சுற்றுலா செல்லும் பள்ளி மாணவர்கள் சந்திந்த நடிகர் ரஜினிகாந்த்
தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான தருணத்தைப் பகிர்ந்து கொண்டது, சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மலேசியாவிற்கு கல்விச் சுற்றுலா செல்லும் அரசுப் பள்ளி மாணவர்கள் ரஜினிகாந்த்..துடன் எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது.
52 அரசுப் பள்ளியில் இருந்து’ விளையாட்டு கல்வி இலக்கியம் கலை போன்றவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்து செல்ல படுகிறது.
விமான நிலையத்தில் அவர்கள் புறப்படும்போது, மாணவர்களை ரஜினிகாந்து’ சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் விவரங்களை அமைச்சர் பகிர்ந்து கொண்டார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, மலேசியாவுக்கான எட்டாவது கல்விச் சுற்றுலாவாகும்.
பல மாணவர்கள் முதல் முறையாக விமானப் பயணத்தை அனுபவித்தனர், இது பயணத்தை இன்னும் சிறப்பானதாக்கியது. ரஜினிகாந்த், தனது பாணியில் மாணவர்களை ஊக்குவித்தார்.
நடிகரின் வார்த்தைகள் இளம் பயணிகளுக்கு கூடுதல் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்தன, அவர்களின் பயணத்தை இன்னும் மறக்கமுடியாததாக மாற்றியது.