நடிகர் தர்ஷன் விடுதலை…யாக யாகம் நடத்திய நடிகர் சங்கம்
பிரபல கன்னட நடிகர் தர்ஷன் மற்றும் பவித்ரா கௌடாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ரசிகரை கடத்திச் சென்று போட்டு தள்ளிய வழக்கில் ஜூன் 11ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் விரைவில் விடுதலை ஆக வேண்டும் என்று கன்னட நடிகர் சங்கத்தினர் நடிகர் சங்கத்தில் ஹோமம் மற்றும் யாகம் நடத்தி பூஜைகள் செய்த சம்பவம் தற்பொழுது சர்ச்சையாகி உள்ளது.
இந்த பூஜையில் பல முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொண்டதாகவும் மேலும் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் கலந்து கொண்டதாகவும் யாகத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதில் சர்ச்சை எழுந்துள்ளது.
தவறு செய்த ஒரு நபருக்காக இப்படிப்பட்ட யாகம் நடத்துவது சரியா என்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது பற்றி தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் கூறியதாவது நாங்கள் நாட்டின் வளர்ச்சிக்காக தான் யாகம் நடத்தினோம் தர்ஷனின் விடுதலைக்காக அல்ல என்று பிளேட்டை மாத்திவிட்டார்.