சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லும் நடிகர் ஷாருக்கான்
இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சில காலமாக கண் பார்வை கோளாறு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகிறார்.
இவர் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தற்பொழுது மீண்டும் அவருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மும்பையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டார்.
மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்று டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்.
ஓரிரு தினங்களில் ஷாருக்கான் சிகிச்சைக்காக அமெரிக்க செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.