in

பழனி தண்டாயுதபாணி சுவாமி சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்

பழனி தண்டாயுதபாணி சுவாமி சுவாமி கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். புத்தாண்டு பிறந்ததை ஒட்டி சிவகார்த்திகேயன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். புத்தாண்டு பிறந்ததை ஒட்டி சிவகார்த்திகேயன் சிறப்பு தரிசனம் மேற்கொண்டுள்ளார்.

‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இன்று காலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று விட்டு அதனை தொடர்ந்து பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் வந்திருந்தார் இவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது மேலும் அங்கிருந்த பக்தர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுடன் செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.

கடந்த மாதம் ’புஷ்பா 2’ பட புரோமோஷன் நிகழ்ச்சியில் தாய் மற்றும் மகன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த நிலையில் இன்று சிவகார்த்திகேயன் வருகையின் காரணமாக போலீசார் பாதுகாப்பு பணியில் அவருடன் வந்திருக்கின்றனர்

What do you think?

நத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சோலார் மின் கம்பத்தில் பேட்டரி, திருடிய வாலிபர் கைது

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா…