சாயாவனம்’ படம் பற்றி நடிகர் சௌந்தரராஜன் … ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள் நிறைந்த கதை
சீதா தன்னைச் சுற்றியுள்ள உண்மையான நிலையை உணர்ந்து அனைத்து மத மற்றும் சமூக விதிமுறைகளையும் பின்பற்றி நேர்மையான மற்றும் உண்மையான வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறாள்.
இந்த செயல்பாட்டில், அவர் ஒரு வலிமையான மற்றும் தைரியமான பெண்ணாக வெற்றி பெறுகிறார். இது தான் ‘சாயாவனம்’ படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.
பிரபல மலையாள இயக்குநரான அனில் ‘சாயாவனம்’ படம் மூலமாக தமிழில் கால் பதித்து இருக்கிறார்.
நாயகனாகவும் வில்லனாகவும் மற்றும் குணசேகர வேடங்களில் மட்டுமே நடித்துள்ள சௌந்தரராஜன் இந்த படத்தின் மூலம் கதாநாயகனாக முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாகவே மாறிவிட்டார்.
‘சாயாவனம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் தேவானந்தா மற்றும் அப்புகுட்டி, ஜானகி, சந்தோஷ் தாமோதரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து சௌந்தர்ராஜன் கூறியதாவது ‘சாயாவனம்’ என்பதற்கு ‘அடர்ந்த காடு’ என்று அர்த்தம். சீதை கதாபாத்திரத்தில் நடிக்கும் தேவானந்தா வை சுற்றித்தான் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.
முழுக்க முழுக்க காடுகளையும் மலைகளையும் பின்னனியாகக் கொண்டே இப்படம் படமாக்கப்பட்டது. இதுவரை நான் நடிக்காத கதாபாத்திரமானதால் இப்படம் பெரும் சவாளாக இருந்தது.
பெரும்பாலான காட்சிகள் காஞ்சிபுரத்தில் பணமாக்கப்பட்டுள்ள நிலையில் இடைவிடாத மழையால் ஒரு பெண் எதிர்கொள்ளும் சவால்கள்தான் இந்த படத்தின் கதை பல சிரமங்களுக்குகிடையே மலைப்பகுதியில் இப்படங்களை நாங்கள் படமாக்கினோம், இப்படதிற்காக நிறைய பயிற்சிகள் எடுத்தோம் இந்த படம் சென்னை மற்றும் கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிட்டபோது பாராட்டுக்களை பெற்றது என்பதை நான் பெருமையாக கூறிக் கொள்கிறேன்.
சாயாவானம் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது என்று மகிழ்ச்சியோடு கூறினார்.