விலாவில் மரக் கட்டையால்..தாக்கபட்ட நடிகர் சுனில் ஷெட்டி
ஹிந்தி திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் சுனில் ஷெட்டி. இவர் திரைபடத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்கையிலும் ஹீரோ தான்.
மும்பை காமாட்டிபுரா பகுதிக்குக் நேபாள பெண்கள் கடத்தி வரப்பட்ட போது அவர்களை மீட்டு மீண்டும் நேபாளதிற்கு அனுப்ப நினைத்த போது நேபாள அரசு அவர்களை பிறப்புச் சான்று மற்றும் குடியுரிமைச் சான்று இல்லை என்று கூறி அனுமதிக்க மறுத்தது.
சுனில் ஷெட்டி தன் சொந்த செலவில் 128 பெண்களூக்கும் விமான டிக்கெட் எடுத்து நேபாளதிற்கு அனுப்பி வைத்தார். தமிழில் ரஜினிகாந்த் உடன் தர்பார் படத்தில் வில்லனாக நடித்தார்.
தற்பொழுது முன்பு போல திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோலிலும் வெப் சீரிஸ் …சிலும் நடித்து வருகிறார்.
இவர் தற்பொழுது ஹன்டர் என்ற வெப் சீரியஸில் நடித்து வருகிறார். மும்பையில் இருக்கும் தாதாக்களை மையமாக வைத்து தயாரிக்கும் இந்த தொடரில் சுனில் செட்டி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
சீரிஸ் …காண ஆக்ஷன் காட்சி படமாக்கிய போது எதிர்பாராத விதமாக சுனில் ஷெட்டி…இக்கு விலா எலும்புகளில் பலத்த அடிபட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.
நான்கைந்து ஸ்டண்ட் கலைஞர்கள் மரக் கட்டையை வைத்து சண்டை இடும்போது எதிர்பாராதவிதமாக சுனிலின் விலா எலும்பில் தாக்கியது. ஒரு நட்சத்திரம் தனது சொந்த பாதுகாப்பை புறக்கணித்து ஸ்டண்ட் செய்யும் போது எத்தகைய விளைவை ஏற்படுத்தும் என்பதை சுனில் நிரூபித்திருகிறார்.
சிகிச்சைக்கு பிறகு பேட்டி அளித்துள்ள சுனில் செட்டி எனக்கு ஏற்பட்ட விபத்து சிறு காயம் தான் யாரும் பயப்பட வேண்டாம் உங்களின் அன்புக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.