in

நடிகர் TR மகாலிங்கம் பத்திரிக்கையாளர் சந்திப்பு


Watch – YouTube Click

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென் கரையில், மறைந்த பழம்பெரும் நடிகர் TR மகாலிங்கம் இல்லத்தில் நடைபெறுகிற நூற்றாண்டு விழா குறித்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பு.

இயல் இசை நாடக சக்கரவர்த்தி எனப் புகழப்படும், மறைந்த திரைப்பட நடிகரும் பாடகருமான கலைமாமணி டி. ஆர். மகாலிங்கம் அவர்களின் நூற்றாண்டு விழா, அவரது சொந்தக் கிராமமான மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள தென்கரையில், அவரது இல்லத்தில் டி.ஆர். மகாலிங்கம் மற்றும் கோமதி மகாலிங்கம் தொண்டு அறக்கட்டளை சார்பாக வருகிற 15.06.24 சனிக்கிழமை மற்றும் 16.06.24 ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.

T.R. மகாலிங்கம் நினைவில், அவரது TRM சுகுமார் பவனத்தில், 15.06.24 சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது.

15.06.24 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு, T.R. மகாலிங்கம் நினைவு கலையரங்கில், திரைப்பட நடிகர் ஒய். ஜி. மகேந்திரன் குழுவினர் நடத்தும் இசைக் கலைஞர்கள் பற்றிய நாடகமான சாருகேசி நாடகத்தை சென்னை தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி துவக்கி வைக்கிறார்.

மறுநாள் 16.06.24 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிக்கு, திரைப்பட பாடகி பத்மபூஷன் P. சுசீலா அவர்கள் குத்து விளக்கு ஏற்ற நிகழ்ச்சி துவங்குகிறது.

காலை 10.00 மணிக்கு கலைமாமணி T.R. மகாலிங்கம் திருவுருவச் சிலையை, திரைப்பட நடிகர் ராதாரவி திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி, தென்னிந்திய நடிகர் சங்கம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெறுகிறது.

ஞாயிறு அன்று நடைபெறும் சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில், திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன், திரைப்பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், திரைப்பட நடிகர் ராஜேஷ், நகைச்சுவை நடிகர் செந்தில் உள்ளிட்ட திரைப்பட பிரபலங்களும்,

இயல் இசை நாடகமன்றத் தலைவர் வாகை சந்திர சேகர், திரைப்பட இயக்குநர்கள் வாசு, சந்தான பாரதி, அன்பாலயா பிரபாகர், பாரதி கண்ணன், சிங்கம்புலி உள்ளிட்டோரும்,

திரைப்பட நடிகர்கள் பொன்னம்பலம், வையாபுரி, ஞான சம்பந்தன், வேலா ராமமூர்த்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

நிகழ்ச்சியில் கலைமாமணி நாட்டிய திலகம் வெண்ணிற ஆடை நிர்மலா, செந்தமிழ் தேன் மொழியாள் என்ற பாடலுக்கு நடனமாட இருக்கிறார்.

இந்த நூற்றாண்டு விழாவில் பொதுமக்கள் மற்றும் TR மகாலிங்கம் ரசிக பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு TR மகாலிங்கம் அவர்களின் பேரன், T.R.M.S . ராஜேஷ் மகாலிங்கம் இன்று நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

விழாவில் கலந்து கொள்ளும் அனைவர்க்கும் அறுசுவை விருந்து நிகழ்ச்சி இரு நாட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

பங்குச்சந்தையில் ஊழ்லை கண்டித்து காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

இன்றைய முக்கிய செய்திகள் 08.06.2024