in

பெண்கள் பாதுகாப்பு குறித்து…. தமிழக ஆளுநரைச் சந்தித்த நடிகர் விஜய்


Watch – YouTube Click

பெண்கள் பாதுகாப்பு குறித்து…. தமிழக ஆளுநரைச் சந்தித்த நடிகர் விஜய்

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டு இறந்த சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தனது x தளத்தில் உருக்கமான கடிதம் ஒன்றை தன் கைப்பட எழுதி வெளியிட்டார்.

அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதர்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்களுக்கும் எனது அருமை தங்கைகள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் நடக்கும் சமூக அவலங்கள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், பாலியல் வன்கொடுமைகளை கண்டு நான் சொல்ல முடியாத மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றேன்.

உங்கள் பாதுகாப்பை யாரிடம் கேட்பது நம்மை ஆளும் ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் அதற்கான பலன் இல்லை, இந்த சூழ்நிலையில் நிச்சயம் நான் உங்களுடன் இருப்பேன் அண்ணனாகவும் அரனாகவும் இருப்பேன் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்வில் கவனம் செலுத்துங்கள் பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் அதற்கான உத்தரவாதத்தை நாம் அனைவரும் இணைந்து விரைவில் சாத்தியப்படுத்துவோம் பிரியமுடன் உங்கள் அண்ணன் விஜய் என்று எழுதிய கடிதத்தை விஜய் ரசிகர்களும், தொண்டர்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றனர்.

இந்த சம்பவம் காரணமாக தமிழக கவர்னர் ஆர். என். இரவியை நடிகர் விஜய் நேற்று சந்தித்து கவர்னருக்கு திருக்குறள் புத்தகத்தை வழங்கினார், கவர்னர் விஜய்…இக்கு பாரதியார் கவிதை தொகுப்பு புத்தகத்தை வழங்கினார்.

பின்னர் மூன்று பக்கம் அளவில் எழுதப்பட்ட மனுவை கவர்னரிடம் ஒப்படைத்து சிறிது நேரம் இருவரும் பேசிய பின்பு விஜய் புறப்பட்டு விட்டார். அண்ணா பல்கலைக்கழகதில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யபட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் சுதந்திரமாக சுற்றி திரிகிறார்கள் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


Watch – YouTube Click

What do you think?

என் பெயர் கீர்த்தி தோசை இல்ல …கீர்த்திசுரேஷ்

சீரியல் நடிகை சித்ரா…வின் தந்தை தூக்கிட்டு…..இன்று…..மறைந்தார்