in

நடிகர் விஜய் அரசியல் பயணம் நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி பேட்டி


Watch – YouTube Click

நடிகர் விஜய் அரசியல் பயணம் நடிகர் ராகவா லாரன்ஸ் அதிரடி பேட்டி

 

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததில் சந்தோஷம், மக்கள் விஜய் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள் மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நடிகர் ராகவா லாரன்ஸ் துவங்கி உள்ள சேவையே கடவுள் என்ற அறக்கட்டளை சார்பில் டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் பேட்டி.

நடிகர் ராகவா லாரன்ஸ் சேவையை கடவுள் என்ற பெயரில் அறக்கட்டளை துவங்கியுள்ளார். இதில் மாற்றம் என்ற பெயரில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தில்லையாடி வருகை புரிந்த நடிகர் ராகவா லாரன்ஸுக்கு அங்குள்ள பொதுமக்கள் ரசிகர்கள் மாணவ மாணவிகள் பெண்கள் மேளதாளங்கள் முழங்க வான வேடிக்கைகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஒருவரை ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். நிகழ்ச்சியில் பேசிய திரு ராகவா லாரன்ஸ் மாநிலம் முழுவதும் 500 விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப் போவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் விவசாயிகள் பல்வேறு இடங்களில் கடன் சுமையால் தற்கொலை செய்வது கொள்வதாக வரும் செய்திகள் தன்னை மிகுந்த வேதனை அளித்ததாகவும் இதனை போக்கும் வகையில் விவசாயிகள் காண உபகரணங்கள் வழங்க முடிவு செய்து மாநிலம் முழுவதும் வழங்கி வருவதாகவும் இங்கு வழங்கி உள்ள டிராக்டரை அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

இளையராஜா வைரமுத்து மோதல் பற்றிய கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்துவிட்ட நிலையில் இந்த சேவை குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.

நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த திரு ராகவா லாரன்ஸ் நடிகர் விஜய் எதை செய்தாலும் அதை சரியாக செய்வார் அவர் அரசியலுக்கு வந்தது சந்தோஷம் என்றும் மக்கள் நடிகர் விஜய் இடம் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர். விஜய்யும் மக்களிடம் நம்பிக்கை வைத்து கட்சியை ஆரம்பித்திருக்கிறார் நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.


Watch – YouTube Click

What do you think?

சிறையில் சவுக்கு சங்கர் உயிருக்கு ஆபத்து

0

ஆர்வத்துடன் நுங்கு வண்டி ஓட்டிய மாணவர்கள் – நுங்கு குறித்து விழிப்புணர்வு