நடிகர் விஜய் கட்சி கொடி…க்கு எதிர்ப்பு….நீதிமன்றத்தை நாடுவோம்
நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை சென்ற வாரம் அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த கொடியில் இடம்பெற்றுள்ள யானை உருவத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் செய்திருக்கிறது.
ஏற்கனவே இவர் கட்சியின் பெயரை அறிவித்த போதும் சொற்பிழை இருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது கட்சியின் கொடியும் பிரச்சனயில் சிக்கி இருக்கிறது.
விஜய் தனது கட்சி கோடியில் இருக்கும் யானையின் படத்தை கட்சியின் கொடியிலிருந்து நீக்காவிட்டால் தாங்கள் கோர்ட்டுக்கு செல்வோம் என்று அக்கட்சியின் தலைமை புகார் அளித்து இருக்கிறது.
மேலும் எங்கள் சங்கத்தின் கொடியை இவர்கள் பயன்படுத்தி இருப்பதாகவும் குரல் உயர்த்தப்பட்டிருக்கிறது தனது கட்சியின் கொடிக்கும் அதில் இடம்பெற்றுள்ள யானைக்கும் எதிர்ப்பு கிளம்புவதை ஏற்க முடியாத விஜய் விரைவில் ஆலோசனை செய்து முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
மேலும் இப்படி ஒரு கொடியை வடிவமைத்தால் எதிர்ப்பு வரும் என்று ஏன் என்னிடம் முன்பே சொல்லவில்லை என்று கோபப்பட்டாராம் விஜய் கட்சி கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் நடுவில் இருக்கும் மஞ்சள் நிறத்தில் வாகைப்பூ இரண்டு பக்கமும் யானை வைக்கப்பட்டுள்ளது, தமிழ் தேசம் தமிழ் மக்கள் ஆகியவற்றை குறிக்கும் வகையில் கொடி அமைக்கபட்டுள்ளது.
விரைவில் தனது கட்சிக்கொடியின் சர்ச்சையை முடித்துவிட்டு மாநாடு நடத்த உள்ளதாகவும், நன்கு அனுபவம் உள்ள பழைய ஆட்களை தனது கட்சிகுள் விஜய் கொண்டு வர வேண்டும் என்று மறைமுகமாக வேலை செய்துவருகிறாராம்.