in

விரைவில் நல்லது நடக்கும் நடிகர் விஷால்

விரைவில் நல்லது நடக்கும் நடிகர் விஷால்

அதிகம் சர்ச்சையில் சிக்கும் ஒரே நடிகர் விஷால் மதகஜ ராஜா ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு வந்தவரின் உடல்நிலையை பார்த்த அனைவரும் அதிர்ச்சி, தற்போது தேறிவரும் விஷால் நடிகர் சங்கம் கட்டிட திறப்பு விழாவில் பிஸி யாக இருக்கிறார்.

நடிகர் சங்கம் கட்டிடம் கட்டிய பிறகு தான் திருமணம் செய்து கொள்வேன் என்று நடிகர் விஷால் அறிவித்திருகிறார்.

விரைவில் நடிகர் சங்க கட்டணம் திறக்க உள்ள நிலையில் அதற்கான வேலைகளை நடிகர் கார்த்தி தீவிரமாக பார்த்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் நடிகர் சங்க கட்டிட பத்திரிக்கையோடு வருகிறேன் என்று விஷால் பேட்டியளித்துள்ளார் .

நடிகர் சங்க திறப்பு விழா முடிந்ததும் விரைவில் நல்லது நடக்கும் என்றவர், நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவை திரையுல கொண்டாட்டங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் நாள்தோறும் நடிகர் சங்க கட்டிடத்தில் நிகிழ்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

புதிய நடிகர் சங்கக் கட்டிடத்திற்கான அடிக்கல் 2017 ஏப்ரல் மாதம் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரால் நாட்டப்பட்டது.

நடிகர் கமல்ஹாசன், விஜய், கார்த்தி, உதயநிதி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடிகர் சங்க மேம்பாட்டு நிதிக்கு தலா ஒரு கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர்.

புதிய கட்டிடத்தில் 1000 இருக்கைகள் கொண்ட அரங்கம், 800 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம், 300 இருக்கைகள் கொண்ட மினி ஹால் என்று சகல வசதிகளுடன் உருவாகி வருகிறது.

What do you think?

சிதம்பரம் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் இருந்து கஞ்சா பறிமுதல்

முதல் முறையாக ஹீரோ ஹீரோயின் இல்லாமல் வெளிவந்த AI திரைப்படம்