மைக்கால் பத்திரிகையாளர்களை கடுமையைக தாக்கிய நடிகர்
மூத்த நடிகர் மஞ்சு மோகன் பாபுவுக்கும் அவரது மகன் மஞ்சு மனோஜ் குமாருக்கும் இடையே நடந்து வரும் குடும்பத் தகராறு காரணமாக மகன் மீது போலீசில் புகார் அளித்தார். செவ்வாயன்று தனது வீட்டில், மோகன் பாபு இரண்டு செய்தியாளர்களை மைக்கை பிடுங்கி தாக்கியதாகவும், அவர்களில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது., மோகன் பாபு ஒரு தொலைக்காட்சி சேனலின் மைக்கை இழுத்து மற்றொரு நிருபரான ரஞ்சித்தின் தலையில் அடித்தார். காயமடைந்த பத்திரிகையாளர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி காயமடைந்த நிருபரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார், அதே நேரத்தில் எம்பி ரகுநந்தன் ராவ் மற்றும் பிற தலைவர்கள் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். தாக்குதலுக்குப் பிறகு மூத்த நடிகரின் வீட்டில் பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தில் மோகன்பாபு படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வாக்குவாதத்தைத் தொடர்ந்து, மோகன் பாபு மற்றும் அவரது இரு மகன்கள் மனோஜ் மற்றும் விஷ்ணு ஆகியோரை புதன்கிழமை காலை 10.30 மணிக்கு ஆஜராகுமாறு ராச்சகொண்டா காவல் ஆணையர் கூறினார். மஞ்சு குடும்பத்தின் உரிமம் பெற்ற துப்பாக்கிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது