ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்கு நடிகர் நடிகைகள்
ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்திற்கு நடிகர் நடிகைகள் விளம்பரப்படுத்தி மக்களை தவறான பாதையில் அழைத்து செல்வதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஹைதராபாத் போலீசார் நடிகர் பிரகாஷ்ராஜ், ராணா, விஜய் தேவர் கொண்டா, பிரணிதா, நிதி அகர்வால், மஞ்சு லக்ஷ்மி, மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் 25 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு போலீசார் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நேரில் விளக்கம் தருமாறு கூறியுள்ளது.
இந்த வழக்கு குறித்து பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது ஆன்லைன் சூதாட்டம் குறித்து தற்பொழுது சர்ச்சை நிலவுகிறது எல்லோரையும் கேள்வி கேட்கும் நான் பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறே ன் அந்த விளம்பரத்தில் நான் நடித்தது உண்மைதான் சில மாதங்களுக்குப் பிறகு அது தவறு என்று புரிந்து கொண்டேன்.
அந்த விளம்பரத்திற்கு ஓராண்டு ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதால் இடையில் நிறுத்தும்படி அவர்களை என்னால் கேட்க முடியாது 2017 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தை நீடிக்க மறுத்துவிட்டேன்.
ஆனால் தொடர்ந்து தொலைக்காட்சியில் அந்த விளம்பரங்களை பயன்படுத்தி வருகிறார்கள் இதை எதிர்த்து நான் வக்கீல் நோட்டீசும் அனுப்பி உள்ளேன் ஹைதராபாத் போலீசார் எனக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். நேரில் சென்று நிச்சயம் அதற்கான விளக்கத்தை நான் அளிப்பேன் என்று கூறியுள்ளார்.