நடிகர்கள் அரசியல் பலம் படைத்தவர்கள் எதிர்க்க முடியவில்லை
ஹேமா கமிட்டி வெளிவந்த பிறகு எல்லா நடிகைகளும் தற்போது தைரியமாக தங்களுக்கு நடந்த பிரச்சனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இது குறித்து முன்னணி நடிகர்கள் யாரும் கருத்து தெரிவிக்க விரும்பாத நிலையில் நடிகைகள் எல்லோரும் அதற்கு ஆதரவு தெரிவித்தும் ஹேமா கமிட்டி..யை Platform….வைத்து எல்லோரும் தங்களுக்கு உடல் ரீதியாக ஏற்பட்ட சங்கடங்களை கூறி வருகிறார்கள்.
இது குறித்து நடிகை விசித்ரா கூறியதாவது நாங்கள் ஒரு பெண்ணாக இருப்பதால் தான் அவர்களுடைய கஷ்டங்களை புரிந்து இன்னொரு பெண்ணிற்கு குரல் கொடுத்து வருகிறோம்.
நடிகைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டியது நடிகைகளுடைய கடமை நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை ஏன் அப்போதே சொல்லவில்லை புகார் அளிக்கவில்லை என்று பலர் கேட்கிறார்கள் எனக்கு நடந்த பிரச்சினை.. க்கு அப்பொழுதே நான் புகார் அளித்தேன்.
ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை ஏனென்றால் நடிகர்கள் பண பலம் அரசியல் பலம் படைத்தவர்கள் அதனால் அவர்களை எதிர்க்க யாராலும் முடியவில்லை மற்ற மொழியை விட தெலுங்கு துறையில் தான் அரசியல் அதிகம் அதனால் நடிகைகளால் தைரியமாக எதிர்த்து நிற்க முடியவில்லை என்று ஆதங்கத்துடன் விசித்ரா கூறினார்.