நடிகர்களை தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்த முடியாது
மலையாள திரை உலகில் புயலை கிளப்பி கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட்டை தொடர்ந்து விஷாலும் தமிழில் நடிகைகளுக்கு பாதுகாப்பு ஏற்படுத்துவதற்காக ஒரு குழு அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் புதிதாக இத்துறைக்கு வரும் பெண்களுக்கு நான் கூறிக் கொள்வது என்னவென்றால் உங்களுக்கு எந்த வகையான தொல்லைகள் ஏற்பட்டாலும் காலில் இருப்பதை எடுத்து அடியுங்கள் என்று நான் கூறியுள்ளேன்.
மேலும் மீ டு இயக்கத்தில் SriReddy எனது பெயரை கூறி பிறகு என்னிடம் மன்னிப்பு கேட்டார் தானே விருப்பப்பட்டு பிறரை அணுகி விட்டு பிறகு கோபப்பட்டு அவர் மேல் குற்றம் சுமத்துவது தவறான அணுகுமுறை.
நடிகைகளின் பாதுகாப்பிற்காக ரோகிணியின் தலைமையில் பெண்களுக்கு குழு அமைக்க ஆலோசித்து வருகிறோம்.
பெண்களிடம் தவறாக நடப்பவர்களை அடித்தாலோ அல்லது உங்களைப் பற்றி வெளியே சொல்லி விடுவேன் என்று மிரட்டினாலோ போதும் அவர்கள் பயந்து விடுவார்கள்.
ஏனென்றால் சினிமா துறை இப்போது மோசமான நிலையில் இருக்கிறது. மாதம் மூன்று படங்கள் வெளியாகி நஷ்டம் அடைகிறது. அதனால் சினிமாவில் பணத்தை போடுவதை விட நிலத்தில் போடுங்கள் என்று நான் பலருக்கு அட்வைஸ் செய்கிறேன் நடிகர்களை தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்படுத்த முடியாது.