50 பள்ளிகளை தத்தெடுத்து நடிகரின் மகள்
பழம்பெரும் நடிகரான மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு தமிழில் மறந்தேன் மன்னித்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மணிரத்னத்தின் கடல், காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்தார்.
இவர், அக்னி நட்சத்திரம் படத்தில் தனது தந்தையுடன் நடித்துள்ளார். பெரிய நடிகரின் மகளாக இருப்பதால் தமிழ் இயக்குனர்கள் தன்னை அணுக யோசிக்கிறார்கள்.
என்னை வைத்து எப்படி படமாக்குவது, என்று யோசிபதால் தமிழில் என்னால் அதிகம் படம் நடிக்க முடியவில்லை என்று ஒரு பேட்டியில் கூறிஇருக்கிறார். சென்னையைச் சேர்ந்த ஆண்டி சீனிவாசனை மணந்தவருக்கு வாடகைத் தாய் மூலம் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அமெரிக்க தொலைக்காட்சி தொடரான லாஸ் வேகாஸ், டெஸ்பரேட் ஹவுஸ்வைவ்ஸ் ஆகியவற்றிலும் லட்சுமி மஞ்சு நடித்துள்ளார். தற்போது தயாரிப்பிலும் இறங்கிஉள்ள. இவர் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் நடிப்பை தாண்டி சமூக சேவையும் செய்து வருகிறார்.
ஏற்கனவே இவர் பல அரசு பள்ளிகளை தத்தெடுத்து உதவி செய்து வருகிறார் தற்போது தெலுங்கானா …வில் 20 பள்ளிகளை தத்து எடுத்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது நான் ஏற்கனவே முப்பது பள்ளிகளை தத்து எடுத்து இருக்கிறேன் இப்பொழுது 20 பள்ளிகளை தத்து எடுத்து இருக்கிறேன்.
என்னை பொறுத்தவரை தனியார் பள்ளிகளில் மாணவர்கலூக்கு கிடைக்கும் அதே வசதி சௌகரியமும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று தான் அரசு பள்ளிகளை நான் தத்தெடுத்திருக்கிறேன்.
பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதுதான் எனது விருப்பம் ஏற்கனவே முப்பது பள்ளிகளையும் ஸ்மார்ட் கிளாஸ்….சாக மாற்றி இருக்கிறேன். இந்த 20 பள்ளிகளையும் அதே போல் மாற்ற வேண்டும் ஒவ்வொருவரும் ஒரு அரசு பள்ளியை தத்தெடுத்தாலே மாணவர்களின் கல்வித் திறனும் வாழ்க்கை திறனும் மாறும் ஒரு ஊரையே நாம் மாற்றிவிடலாம் என்று லட்சுமி மஞ்சள் கூறி இருக்கிறார்.