in

எல்லோரையும் இழந்து தனி மரமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்


Watch – YouTube Click

எல்லோரையும் இழந்து தனி மரமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது அம்மாவிற்கு அன்னையர் தின வாழ்த்துக்களை கூறி தன் அம்மா வாழ்க்கையில் பட்ட கஷ்டத்தை கண்ணீருடன் பகிர்ந்திருக்கிறார்.

கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைத்து அப்பா அவர்களுக்கு கடன் வாங்கி கொடுத்தார்.

திடீரென்று உடல்நலம் சரியில்லாததால் இறந்து போன என் அப்பா..வின் கடன் முழுவதும் என் அம்மாவின் தலையில் விழுந்தது. எங்களுக்குன்னு இருந்த ஒரே பிளாட்டையும் விற்று அந்த கடனை அம்மா அடைத்தார்.

என்னையும் என் அண்ணண்களையும் காப்பாற்றுவதற்காக எல்ஐசி ஏஜென்ட் ஆக வீடு வீடாக ஏறினார் கஷ்டப்பட்டாலும் எங்களை நல்ல பள்ளியில் படிக்க வைத்தார்.

அவர் சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும் எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை என் அண்ணன்கள் இருவரும் படிப்பு முடிந்து வேலையில் சேர்வார்கள் என்று நினைத்தபோது அவர்கள் இருவருமே ஒரு விபத்தில் இறந்து விட்டார்கள்.

ஏற்கனவே கஷ்டத்தில் இருந்த அம்மா என் அண்ணன்களின் மரணத்தால் தாங்க முடியாத வேதனையை அனுபவித்தார்.

தன்னம்பிக்கையை மட்டும் இழக்கவேல்லை. தொழில் ரீதியாக எனக்கு எத்தனையோ போட்டிகள் வந்தாலும் தைரியமாக முன்னுக்கு செல்ல வேண்டும் என்பதை என் அம்மாவிடம் இருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்.

அநியாயத்திற்கு நல்லவராக இருக்கக் கூடாது என்பதையும் என் அம்மாவிடம் நான் கற்றுக் கொண்டேன் என்றார் Ishwarya ராஜேஷ்.


Watch – YouTube Click

What do you think?

கரீனா கபூர் மேல் அதிரடி நடவடிக்கை எடுத்த நிதி மன்றம்

சிவன் உயிர் உலகம் நீயே ..அன்னையர் தின வாழ்த்து கூறிய விக்கி