காதல் கணவரை விவாகரத்து செய்யும் நடிகை அபர்ணா
2023 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அபர்ணா தனது கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். மலையாள நடிகை அபர்ணா வினோத் நவீன் பாலி நடித்த நான் நின்னோடு கூடேயுண்டு என்ற படத்தில் அறிமுகமானார்.
இவர் விஜய்…யின் பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்திருப்பார். இவர் ரில்ராஜ் பிகே என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் இரண்டு வருடதிற்குள் தனது காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார்.
தீவிரமான யோசனைக்கு பிறகு திருமணபந்தத்தை நான் முடித்துக் கொள்ள முடிவு செய்து இருக்கிறேன் சரியான நேரத்தில் சரியான முடிவை நான் எடுத்திருப்பதாக நினைக்கிறேன் என்னுடைய திருமணம் உணர்ச்சிகரமாக முடிவெடுக்கப்பட்டு கடினமான சோதனைகளை கடந்துள்ளது.
அதனால் திருமண வாழ்க்கையை இப்பொழுதே முடிவுக்கு கொண்டு வர நினைத்து என்னுடைய முன்னேற்றத்தை நோக்கி நான் நகர வேண்டும் என்று கூறியுள்ளார்.