வழக்கில் சிக்கிய நடிகர் சித்திக்கை கட்டிபிடித்து அழுது ஆறுதல் சொன்ன நடிகை பீனா ஆண்டனி …..
ஹேமா கமிட்டியால் முன்னணி நடிகர்கள் பலர் பயத்தில் உறைந்து போயிருக்க, மலையாள நடிகர் சங்கம் இந்தப் பிரச்சினையில் இருந்து தப்பிப்பதற்காக கலைக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் பதவியில் இருக்கும் நடிகர் சித்திக் மீது துணை நடிகை ரேவதி சம்பத் அளித்த புகார் மீது போலீசில் வழக்கு பதிவு செய்யபட்டுள்ள நிலையில் அவரும் ராஜினாமா செய்த நிலையில் சித்திக்கு சங்கத்தின் சார்பாக பிரியாவிடை கொடுத்த போது அவரை நடிகை பீனா ஆண்டனி கட்டிப்பிடித்து அழுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருக்கு தற்பொழுது எதிர்ப்பு வலுக்கிறது.
இதற்கு விளக்கம் அளித்த நடிகை பீனா ஆண்டனி நான் நடிகர் சித்திக் மகன் ஷாபி இறந்த போது அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை.
அதனால் நடிகர் சங்க கூட்டத்தில் அவரை கட்டிப்பிடித்து அழுது எனது வருத்தத்தை தெரிவித்தேன்.
மேலும் சித்தீக் என்னை எப்போதும் ஒரு சகோதரி போல தான் நடத்துவார் நான் அவரை கட்டிப்பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி என் மீது தவறான கருத்தை ஏற்படுத்தி இருபது எனக்கும் என் குடும்பத்திற்கும் வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.