16 வருடங்களுக்கு பிறகு தமிழில் என்ட்ரி கொடுக்கும் நடிகை பாவனா
சித்திரம் பேசுதடி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பாவனா கடைசியாக இவர் கிழக்கு கடற்கரை சாலை என்ற படத்தில் நடித்தவர்.
அதன் பிறகு தமிழில் நடிக்கவில்லை 16 வருடங்கள் கழித்து தற்பொழுது டிடோர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் இது அண்ணாவின் திரைப்படம் என்பதால் நடிக்க சம்மதித்தேன் அது மட்டுமல்லாமல் அண்ணா காட்சியை சொல்லிவிடுவார்.
உனக்கு எல்லாமே தெரியும் நீ பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுவார். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் அப்பா தான் கதைகளை தேர்வு செய்வார்கள்.
தமிழ் திரைப்படங்களில் நடிக்க கூடாது என்றெல்லாம் இல்லை தமிழில் வாய்ப்புகள் குறையவே கன்னடம், மலையாளம் என்று சென்று விட்டேன் நானும் யாரிடமும் இதுவரை வாய்ப்பு கேட்கவில்லை மேலும் எனக்கு ரீமேக் படத்தில் நடிப்பதெல்லாம் உடன்பாடில்லை ஏற்கனவே ஒருவர் நடித்த கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க பிடிக்காது இன்னமும் ரசிகர்கள் சுசி கதாபாத்திரத்தை ஞாபகம் வைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.
எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை இருப்பதாக செய்திகள் வெளியாகிறது. ஆனால் நானும் என் கணவரும் இன்னமும் அதே அன்புடன் தான் இருக்கிறோம் எங்களைப் பற்றிய செய்திகளை நாங்கள் இணையத்தில் வெளியிட மாட்டோம் அதனால் தொடர்ந்து இப்படி செய்திகள் வெளிவருகிறது.