in

வாழ்க்கை வெறுத்து கோவில் …. கோவிலாக சொல்லும் நடிகை புவனேஸ்வரி


Watch – YouTube Click

வாழ்க்கை வெறுத்து கோவில் …. கோவிலாக சொல்லும் நடிகை புவனேஸ்வரி

சின்னத்திரை கவர்ச்சி புயல் புவனேஸ்வரி தன் வாழ்க்கையை வெறுத்து துறவரம் பூண்டு கோயில் கோயிலாக சென்று ஏழைகளுக்கு உதவி செய்கிறார் .பாய்ஸ் படத்தில் அவர் ஏற்று நடித்த கதாபாதிரமாகவே எல்லோர் மனதிலும் நிலைத்து இருக்கிறார். சின்னத்திரையில் முதலில் கவர்ச்சியாக நடித்த முதல் நடிகை இவர். சின்னத்திரையில் பிரபல நடிகையாக கொடி கட்டி பறந்தார்.

ஒரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அவரை தவறான தொழில் செய்பவர் என்று போலீசார் கைது செய்தனர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். விடுதலை ஆன பிறகு தெலுங்கு படங்களில் நடித்தவர் தற்போது சினிமாவுக்கு குட் பாய் சொல்லி இருக்கிறார் .ஆன்மிகத்தின் மீது நாட்டம் வந்துள்ளதால் துறவும் பூண்டு கோயில் கோயிலாக சுற்றி கோயில் களில் இருக்கும் ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகிறார். திடீரென்று ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் புவனேஸ்வரி எனது சொந்த ஊர் நெல்லை சங்கரன்கோவில் வறுமை காரணமாக நடிப்பு தொழிலுக்கு வந்த எனக்கு கவர்ச்சி கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது புகழின் உச்சியில் இருந்த நான் சிறைப்பட்டதும் சினிமா துறையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது .

சிறைக்கு சென்ற பிறகு நான் நிரபராதி என்று நிரூபித்த பிறகும் என் மீது உள்ள கண்ணோட்டம் மாறவில்லை .என் வாழ்க்கையில் ஒரு மாற்றம் இருக்க வேண்டும் என்று ஆன்மீகத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன் மீதி காலத்தை நான் இறை பணிக்காக மட்டுமே செலவிடுவேன். நான் முழுமையான மனதுடன் துறவறத்தை ஏற்றுக் கொண்டேன் காசிக்கு சென்று சித்தியும் பெற்று விட்டேன் .நான் செல்லாத கோவிலே இல்லை தேவாலயங்களுக்கும் செல்கிறேன் பள்ளிவாசலுக்கும் செல்கிறேன் என்னை பொறுத்தவரை ஆன்மீகத்திற்கு மதம் ஒரு தடை அல்ல சிறுவயதில் பசிக்காக நான் அலைந்த நிலை யாருக்கும் வர வேண்டாம் என்று தினமும் 300 பேருக்கு சாப்பாடு கொடுக்கிறேன். பொங்கல் தீபாவளி போன்ற நாட்களில் பத்தாயிரம் பேருக்கு உடைகள் வழங்கி வருகிறேன். கந்த சஷ்டி விரதம் இருந்து ஏழைகளுக்கு உதவி செய்கிறேன். நான் யாரிடமும் இதற்காக பணம் வசூலிக்கவில்லை கொடுப்பாரின் மனநிலையும் தவறாக உள்ளதால் நான் யாரிடமும் கேட்கவில்லை .என்னுடைய வீட்டை ஷூட்டிங் காக விட்டு இருக்கிறேன் அதில் வரும் பணமே என் இறை பணிக்கு போதுமானதாக இருக்கிறது .ஒரு அரசியல் கட்சியிலும் மகளிர் அணி செயலாளராக இருக்கிறேன் .என் வாழ்க்கையே ஒரு போராட்டம் , வாழ்க்கை வெறுத்து விட்டது , இனி வாழ்நாள் முழுவதும் இறை பணிக்காக மட்டுமே செலவிடுவேன் என்று கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

முசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தச்சு தொழிலாளி பலி – ஒருவர் படுகாயம்

எல்லதையும் இழந்து ஜீரோ…வாகி விட்டோம் மைனா நந்தினி Yogeswaran பரபரப்பு காணொளி