நடிகை பிந்துகோஷ் காலமானார்
76 வயதாகும் காமெடி நடிகையான பிந்துகோஷ் நேற்று காலமானார்.
கோழி கூவுது படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் நடிகை பிந்துகோஷ். நடிகை பிந்துகோஷ், கோவை சரளா காமெடியனாக பல படங்களில் கலக்கியவர்.
உடல் எடை பிரச்சனை காரணமாக நடிப்பதை நிறுத்திய பிந்துகோஷ் உயர் ரத்த அழுத்தம், நுரையீரல் பாதிப்பு, நீரிழிவு நோய் ,உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிப்படைந்து வீட்டில் இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
மருத்துவ செலவிற்கு சிரம்மப்பட்டஇவருக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட பாலா மருத்துவ சிகிச்சைக்காக ரு. 80,000 கொடுத்து உதவி செய்தார்.
இவருக்கு கடந்த பத்தாம் தேதி உடல்நிலை மோசமானதால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். நேற்று மதியம் திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.