in

மேக்கப் இல்லாமல் நடிக்க முடியாது என மதுரையில் நடந்த விழாவில் நடிகை தேவயானி பேச்சு

மேக்கப் இல்லாமல் நடிக்க முடியாது என மதுரையில் நடந்த விழாவில் நடிகை தேவயானி பேச்சு

 

நான் 30 வருடமாக நடிகையாக இருக்கிறேன். சினிமாவில் மேக்கப் தான் எனக்கு எல்லாமே. நான் மேக்கப் இல்லாமல் நடிக்க முடியாது என மதுரையில் நடந்த விழாவில் நடிகை தேவயானி பேச்சு

யாரும் என்னை ஏமாற்ற முடியாது. மதுரையில் நடந்த விழாவில் நடிகை தேவயானி பேச்சு

ஒரு பொருளை வாங்கும் போது ஏமாற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு அவசியம் என மதுரையில் நடிகை தேவயானி பேச்சு

புதுசான விளம்பரத்துக்கு எப்போதும் நான் போனது கிடையாது மதுரையில் நடந்த விழாவில் நடிகை தேவயானி பேச்சு

மதுரையில் தென் இந்திய நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 33வது தென் இந்திய மாநாடு மதுரை காந்தி மியூசியத்தில் நடைப்பெற்றது.

வழக்கறிஞர்கள் மணவாளன், சிங்கராசு தலைமையில் நடைபெற்ற
தென் இந்திய நுகர்வோர் தின மாநாட்டில் திரைப்பட நடிகை தேவயானி திரைப்பட இயக்குநர்கள் சித்ரா லட்சுமணன், தருண்கோபி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்

இதில் சிறந்த திருப்பரங்குன்றம் அறங்காவலர் குழு உறுப்பினரும் தொழிலதிபருமான சண்முக சுந்தரத்திற்கு சமூகசேவகர் விருதினை நடிகை தேவயானி வழங்கினார்.

விழா மேடையில் நடிகை தேவயானி பேசியதாவது: மதுரை எனக்கு ரொம்ப பிடிக்கும் நிறைய சூட்டிங் பண்ணி இருக்கேன் அன்பான ஊர் அடிக்கடி இங்க வந்திருக்கேன் என்னை அழைத்ததற்கு ரொம்ப நன்றி

நான் நிறைய விழாவிற்கு போயிருக்கேன், ஆனா நுகர்வோர் மாநாட்டு விழாவுக்கு இதுதான் முதல் தடவையா வந்துள்ளேன் இது புது அனுபவம்.

நாம் எல்லோரும் நுகர்வோர் தான். நாம் காசு கொடுத்து தான் ஒரு பொருளை வாங்குகிறோம் அது தரமானதாக இருக்கணும் அப்படி இல்லைனா நுகர்வோர் அமைப்பு உள்ளது கன்ஸ்யூமர் கோர்ட்டு இருக்கிறது.

ஒரு பொருள் சரியில்லை என்றால் ஏன் சரியில்லை? என்ன பிரச்சனை இருக்குன்னு? பார்க்க அமைப்பு இருக்கு இது பற்றி இன்னும் விழிப்புணர்வு இருந்தால் நல்லா இருக்கும்.

தைரியம் நமக்கு வரணும். அதுவும் பெண்களுக்கு வரணும். சின்ன.. சின்ன பிரச்சனை சில நேரம் வரும். நாம் கண்டுக்க மாட்டோம். இதை பண்ணுனா பெரிய பிரச்சனை வந்து விடுமோ என பயப்படுகிறோம். சின்னதா நமக்கு ஒரு ஏமாற்றம் நடந்திருக்கு எதுக்கு பெரிதாக்கனும் என நாம நினைக்கிறோம். சில நேரம் அலட்சியமாக இருக்கிறோம். இந்த மாதிரி ஏமாற்றங்கள் நடப்பதற்கு நம்முடைய அலட்சியம் தான் காரணம். ஏதாவது ஏமாற்றப்பட்டதாக நினைத்தால் தைரியமாக சொல்லுங்க. அதற்கு இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அவர்கள் சரி பண்ணுவார்கள்.

நான் இந்த சினிமாவுக்கு அதாவது சின்னத்திரையாக இருக்கட்டும் பெரிய திரையாக இருக்கட்டும் எனக்கு இவ்வளவு அன்பு, இவ்வளவு ஆதரவு இவ்வளவு வருடமாக தந்ததற்கு ரொம்ப நன்றி.

ஒரு பொருளை வாங்கும் போது ஏமாற்றத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள விழிப்புணர்வு அவசியம். தரமான பொருளை தரமான இடத்தில் வாங்குங்க ஏதாவது பொருளை வாங்கும் போது படித்து பார்த்து காலாவதியான தேதியை பார்த்து எந்த கம்பெனி தயாரிக்கிறது என பார்த்து வாங்குங்க. ஆன்லைனில் நிறைய கம்பெனிகள் வந்துட்டு இருக்கு நாம பார்த்து வாங்கணும்.

நான் 30 வருடமாக நடிகை யாக இருக்கிறேன். சினிமாவில் மேக்கப் தான் எனக்கு எல்லாமே. நான் மேக்கப் இல்லாமல் நடிக்க முடியாது .மேக்கப் போடு நிறைய பிரான்ட்ஸ் வந்துடுச்சு தினசரி வளர்ந்து வருகிறது. விதவிதமான பெரிய கம்பெனிகள் மேக்அப் பொருளை தயாரிக்கிறாங்க . நான் நடிகை என்பதால் எனக்கு முக்கியமானது மேக்கப் மெட்டீரியல்ஸ் . நான் என்ன செய்யணும் தரமான பொருளை பார்த்து வாங்கணும் இளம்பெண்களுக்கு சொல்லிக் கொள்வது தரமான பொருட்களை வாங்குங்க. தரமான கம்பெனி பொருட்களை வாங்குங்க.

பளிச்சு பளிச்சென வரும் விளம்பரத்தை பார்த்துட்டு இப்ப இருக்குற குழந்தைங்க போனில் அடிட்டாயிருதாங்க. தினமும் சோசியல் மீடியாவில்ஆயிரம் விளம்பரங்கள் வருது இது வாங்குங்க.. அது வாங்குங்க என்று அந்த விளம்பரத்தை பார்த்துட்டு அதில் மாட்டிறக்கூடாது.

நாம் நமக்கே சேவ் பண்ணனும் ஏமாற்றத்தில் நாம் சேர்ந்திடக் கூடாது ஏமாற்ற யாரையும் விடக்கூடாது.. ஏமாற்ற யாருக்கும் ரைட்ஸ் கிடையாது.

பெண்கள் எல்லோரும் தூண்கள் நீங்க அலர்ட்டா இருக்கணும் ஏதாவது தப்பு நடந்தா கன்வே பண்ணுங்க. சைலன்டா இருக்கக் கூடாது ஏதாவது ஃபீல் ஆச்சுன்னா தப்பு இருக்கு.. சரியில்லை என பேசுங்க பேசினா தான் வெளியே வரும்.

நான் மேக் அப் ரிமூவர் இருக்குது அதை வாங்க மாட்டேன் அதற்கு பதில் எனது பாட்டி காலத்தில் இருந்து யூஸ் பண்ண கூடிய கோக்கனட் ஆயில் இருக்கு ரொம்ப சிம்பிள் அது போதும் அதைத்தான் யூஸ் பண்ணுவேன். யாரும் என்னை ஏமாற்ற முடியாது.

புதுசான விளம்பரத்துக்கு எப்போதும் நான் போனது கிடையாது என்றார்.

What do you think?

மதுரை பொன்முடியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா

பனை ஓலை கைவினைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி