நடிகை தேவயானி..இயக்கிய படத்திற்கு விருது
நடிகை தேவயானி தொட்டால் சிணுங்கி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா…வுக்கு அறிமுகமானவர் காதல் கோட்டை படத்திற்கு பிறகு பிரபலநாயகியாக மாறினார். 30 ஆண்டுகளாக திரையுலகில் பயணம் செய்து கொண்டிருக்கும் இவர் பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார் .
சின்னதிரை சீரியலிலும் கலக்கி கொண்டிருகிறார் தேவயானி முதல் முறையாக கைக்குட்டை ராணி என்ற குறும்படத்தை தானே தயாரித்து இயக்கிருகிறார். இந்த படம் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த குறும்படத்திற்கான விருது தேவயானிக்கு கொடுக்கப்பட்டது. தாயை இழந்து, வெளியூரில் பணிபுரியும் தந்தை, ..இக்கு ஒரு பெண் குழந்தை … பெற்றோர் இல்லாமல் அந்த குழந்தை சந்திக்கும் சிக்கல்களை உணர்வுபூர்வமாக சொல்லிருக்கும் இந்த படத்தில் நிஹாரிகா, நவீன் ஆகியோர் நடிப்பில் இளையராஜா இசையமைத்துள்ளார் .
விருது பெற்ற தேவயானி கூறுகையில் எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும் முதன்முறையாக நான் இயக்கிய இந்த படத்திற்கு கிடைத்த விருதைப் பெறும் போது மகிழ்ச்சியையும் பெருமையும் அளிக்கிறது சர்வதேச அளவில் இந்த படத்தை கொண்டு செல்லும் முயற்சியிலும் இறங்குவேன் என்று கூறியுள்ளார்.