in

மேனேஜர் வீட்டை தரைமட்டமாக்கிய நடிகை கௌதமி

மேனேஜர் வீட்டை தரைமட்டமாக்கிய நடிகை கௌதமி

திட்டம் போட்டு தனது வீட்டை நடிகை கௌதமி இடித்து விட்டதாக கௌதமியின் மேலாளர் அழகப்பன் குற்றம்சாற்றியுள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பாக கௌதமி தனது மேலாளர் தனக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து கொண்டதாக அழகப்பன் மற்றும் அவரது மனைவி மீது கொடுத்த புகாரின் பேரில் சிறை சென்றனர்.

ஜாமினில் வெளியே வந்தவர்கள் நீலாங்கரையில் உள்ள வீட்டை காணவில்லை என்று அழகப்பன் புகார் அளித்துள்ளார். பாஜகவில் இருந்து வெளியேறி கௌதமி அதிமுகவில் தற்போது இணைந்துள்ளார்.

கௌதமி அவரது மேனேஜர் அழகப்பனிடம் தனது சொத்துக்களை பராமரிக்கவும் விற்பதற்கும் அழகப்பனை கேர் ஆஃப் அட்டானியாக (Care of Attorney) கௌதமி நியமித்திருந்தார்.

ஆனால் தன்னை ஏமாற்றி நிலத்தை அழகப்பன் அபகரித்ததாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக இருவரிடமும் விசாரணை செய்த போலீசார் அழகப்பன் மற்றும் அவரது மனைவியை சிறையில் அடைத்தனர். ஆறு மாத தண்டனை ..இக்கு பிறகு ஜாமீன்..னில் வெளியே வந்தவர்கள் நீலாங்கரையில் அவர்கள் கட்டிய வீடு தரைமட்டமாக இடித்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் கெளதமிதான் இதற்கு காரணம் என்று கூறுகிறார்.

நீலாங்கரையில் கௌதமியும் அழகப்பனும் பக்கத்து பக்கத்தில் மனை வாங்கி அழகப்பன் தனக்கு சொந்தமான இடத்தில் இரண்டு தலங்கள் வரை வீடு கட்டியிருந்தார்

இது சம்பந்தமாக மாநகராட்சியில் கேட்ட பொழுது எங்களுக்கு தெரியாது என்றும் கூறிவிட்டனர். மேலும் கௌதமி அவர்கள் வீட்டில் இருந்த சிசி டிவியும் அகற்றி விட்டார், இரு நிலத்திற்கும் பொது வழியாக இருந்த இடத்தையும் கௌதமி பூட்டிவிட்டார், 2 கோடி ரூபாய் செலவு செய்து கட்டிய வீடு தரைமட்டமா ஆக்கிவிட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளனர் கௌதமி தரப்பு இதுவரை அதற்கான விளக்கம் கொடுக்கவில்லை.

What do you think?

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா 2024 – 2025 – பகல் பத்து பத்துதாம் நாள் உற்சவம் மோகினி அலங்காரம்

நடிகை கியாரா அத்வானி Latest