in

நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது ..சிறையில் அடைக்க பட்டார்.

நடிகை கஸ்தூரி ஹைதராபாத்தில் அதிரடி கைது..சிறையில் அடைக்க பட்டார்..

பிராமண சமுதாய மக்களுக்கு பி சி ஆர் எனப்படும் வன்கொடுமை சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்து கட்சி சார்பாக சென்னையில் 3ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்களைப் பற்றி தர குறைவாக நடிகை கஸ்தூரி பேசியதாக அவர் மீது தெலுங்கு மக்கள் பல பிரிவுகலில் வழக்கு பதிவு செய்தனர். அதற்காக மன்னிப்பும் கேட்டு ஒரு போஸ்ட்டையும் வெளியிட்டு இருந்தார் . அவர் மீது வழக்கு தொடர்வதாக போலீசார் சமன் அனுப்பிய நிலையில் . முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுபோட்டிருந்தார்.

ஆனால் நீதிமன்றம் கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க மறுத்ததால் போலீசார் அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்ட போது நடிகை கஸ்தூரி தலைமறைவானார். இந்நிலையில் மதுரை போலீஸ் உடன் இணைந்து சென்னை போலீஸ் குழு ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட தயாரிப்பாளரின் வீட்டில் அவரைக் கண்டுபிடித்து கைது செய்தது. சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நவம்பர் 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர், அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். எழும்பூர் court…டில் ஆஜர்படுத்தியபோது உருக்கமான வேண்டுகோளையும் நீதிமன்றத்தில் வைத்தார். என்னுடன் யாரும் இல்லை கணவரும் என்னுடன் நிலை நான் தனியாக வசித்துக் கொள்கிறேன் வருகிறேன்.என்னுடைய மாற்றுத்திறனாளி குழந்தையை ஹைதராபாத்தில் படிக்க வைத்து வருகிறேன் தெலுங்கு படப்பிடிப்பில் நடிப்பதற்காக ஹைதராபாத் சென்றேன். என்னுடைய சென்னை வீட்டில் போலீசார் சமன் ஓட்டியது எனக்கு தெரியாது என்னை சிறையில் அடைத்தால் என் குழந்தை தனியாக தவிப்பார் அதற்காகத்தான் முன் ஜாமின் கேட்டேன் என்றார்.

இவரின் வேண்டுகோலை மறுத்த மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற காவலில் நடிகை கஸ்தூரியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரி. நான் தலைமறைவு ஆகவில்லை ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை ஹைதராபாதின் சூட்டிங் ..டில் தான் இருந்தேன் போலீசருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். மன உளைச்சல் அதிகமாக இருந்தால் மன அமைதிக்காக செல்போனை ஆப் செய்து எனது வக்கீல் இடம் கொடுத்தேன், இன்று தான் எனது செல்போனை பார்த்தேன். கஸ்தூரி பயந்து தலைமறைவாகிவிட்டார் என்று கூறியுள்ளார்கள் .எனக்கு எந்த பயமும் என்று சொல்லிட்டு சிரித்த முகத்துடன் போலீசாரின் வாகனத்திலேயே சிறைச்சாலைக்கு சென்றார். பேசியதிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார்,விட்டு விட வேண்டியதுதானே ஆனால் அவசர அவசரமாக ஒரு பெண்ணை ஹைதராபாத்து சென்று கைதி செய்து சிறையில் அடைக்கும் அளவிற்கு பெரிய குற்றம் செய்துவிடவில்லை என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

What do you think?

எதிர்ப்பை மீறி ….வெளியிட்ட நயன்தாரா…. ஆவணப்படத்தின் மீது தனுஷ் 10 கோடி ரூபாய் வழக்கு

கடும் கோபத்தில் ஜோதிகா