நடிகை பார்வதி நாயருக்கு சென்னையில் இன்று திருமணம் நடந்தது
நடிகை பார்வதி நாயர் மற்றும் அஷ்ரித் அசோக் ஆகியோருக்கு பிரமாண்டமான சென்னை திருவான்மியூரில் இன்று திருமணம்நடந்தது.
திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் புதுமணத் தம்பதிகளுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு, அவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.. பார்வதி ‘உத்தம வில்லன்’, ‘எங்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘என்னை அறிந்தால்’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
விஜய்யின் ‘தி கோட்’ படத்திலும் அவர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். சமீபத்தில், ‘ஆலம்பனா’ படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க வேடத்தில் நடித்தார், பார்வதி நாயரும் அஷ்ரித் அசோக்கும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே காதலித்தனர் பார்வதி தனது கணவர் குறித்து கூறுகையில் முதன்முதலில் சந்தித்தபோது, “நாங்கள் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன் டேட்டிங் செய்யத் தொடங்கினோம், எங்கள் இரு குடும்பங்களுக்கும் எங்கள் உறவு பற்றித் தெரிந்ததால், என் அம்மா எங்கள் திருமணதிற்கு ஓகே சொல்லிட்டாங்க.