காளஹஸ்தி கோவிலில் நடிகை பூஜா ஹெக்டே வழிபாடு
பிரபல நடிகை பூஜா ஹெக்டே இன்று காளஹஸ்தி கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.
சாமி கும்பிடுவதற்காக குடும்ப உறுப்பினர்களுடன் பூஜா ஹெக்டே காளஹஸ்திக்கு வந்திருந்தார்.
அவரை கோவில் அதிகாரிகள் வரவேற்று சாமி தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.
தொடர்ந்து காளஹஸ்தி கோவிலில் வழிபாடு மேற்கொண்ட அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கிய நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.
இதனை தொடர்ந்து பூஜாஹெக்டே திருச்சானூர் கோவிலுக்கு சென்று அங்கு பத்மாவதி தாயாரை தரிசித்தார்.