கடத்தல் கும்பல் மிரட்டியதால் …. குற்றத்தை ஒப்பு கொண்ட நடிகை Ranya Rao
தங்க கடத்தல் சம்பந்தமாக கைது செய்யப்பட்ட கர்நாடக நடிகை Ranya ராவ் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்ததாகவும், துபாய் மற்றும் சவுதி அரேபியாவிற்கும் சென்றதாகவும் டிஆர்ஐக்கு வாக்கு முலம் அளித்துள்ளார்.
தங்கக் கடத்தல் வழக்கில் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, கன்னட நடிகை ரன்யா ராவ் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அவர் துபாய்க்கு மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பயணம் செய்ததாகக் கூறினார். நேற்று பெங்களூருவில் உள்ள அவரது குடியிருப்பில் சோதனைக்குப் பிறகு 17.29 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டது.
அக்ரஹாரா சிறையில் தற்பொழுது உள்ளார் நடிகை ரன்யாவின் விசாரணையின் போது தன்னை பெங்களூர் மற்றும் ஆந்திராவை சேர்ந்த கும்பல் மிரட்டி தங்க கடத்த பயன்படுத்தினர்.
இதனால் நான் துபாய்க்கு நான்கு முறை இந்த ஆண்டில் சென்றேன் என்று கூறி கதறி அழுதார் போலீசார் தொழில் அதிபர்கள் பலர் இந்த கடத்தல் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை கூறுகையில் இதுபோன்ற ஒரு சம்பவம் ஊடகங்கள் மூலம் என் கவனத்திற்கு வந்தபோது நான் அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன்.
இவை எதுவும் எனக்குத் தெரியாது. அவள் எங்களுடன் வசிக்கவில்லை; குடும்பப் பிரச்சினைகள் காரணமாக அவள் தன் கணவருடன் இல்லாமல் தனியாக வசித்து வருகிறாள், “சட்டம் அதன் வேலையைச் செய்யும். என்றார்.