in

கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவின் பெங்களூரு வீட்டில் சோதனை

கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவின் பெங்களூரு வீட்டில் சோதனை

கன்னட நடிகை ரன்யா ராவின் பெங்களூருவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து மேலும் தங்கம் மற்றும் பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தல் வலையமைப்பில் அவருக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (DRI) விசாரணையைத் தொடர்கிறது.

புதன்கிழமை அவரது லாவெல் சாலை இல்லத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரூ.2.7 கோடி ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதிகாரிகள் விசாரிக்கையில் மூன்று மாதங்களுக்கு முன்பு Engineer…Rudan திருமணம் நடந்ததால் இந்த வீட்டில் தான் வசித்ததாக அவர் கூறியுள்ளார்.

தான் கடத்தல் தொழில் செய்யவில்லை என்றும் துபாயில் தான் தொழில் செய்து வருவதாகவும் அதனால் அடிக்கடி துபாய் செல்வதாகவும் அதிகாரியிடம் தெரிவித்தார்.

ஆனால் விசாரணையில் இவர் துபாயில் எந்த தொழிலும் செய்யவில்லை கடத்தல் தொழில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார் என்றும் தெரியவந்தது.

இவர் கடந்த மூன்றாம் தேதி 14 தங்க கட்டிகளை லெதர் ஜாக்கெட்டில் சுற்றி தனது தொடை பகுதியில் வைத்து கடத்தி வந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் இவர் 40 முறை துபாய்க்கு சென்று இருக்கிறார் இந்த கடத்தல் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று அதிகாரிகள் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

What do you think?

மயிலம் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணி சுவாமி ஆலய மாசி மாத கிருத்திகை

பிரபு பெயரில் இருக்கும் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்