நடிகை ரவீனா..விற்கு நடிக்க தடையா
ஜீ தமிழில் ஒளிபரப்பப்பட்ட டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் பரிசை பெற்றவர் சீரியல் நடிகை ரவீனா.
தாகா இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் கதை சொல்ல போறோம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தவருக்கு வெற்றி கை கொடுக்காத நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பினார்.
மௌன ராகம் 2 சீரியல் முலம் எல்லோருக்கும் பரிச்சயம் ஆனவர் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அதன்பிறகு பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றார்.
தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு ரெட்கார்டு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, அதாவது சீரியலில் நடிக்க ஒபந்தம் போட்டதோடு சரி அதன் பிறகு சீரியலில் நடிக்கவில்லை தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் இவர் மீது புகார் அளித்ததின் காரணமாக இவருக்கு ரெட் காடு கொடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதற்கு விளக்கம் கொடுத்த ரவீனா தயாரிப்பாளர் சங்கத்தில் என் மீது புகார் கொடுத்து இருப்பது உண்மைதான் ஆனால் எனக்கு ரெட்கார்டு எல்லாம் போடவில்லை என்று கூறியுள்ளார்.