நடிகை ரேவதி தனது சினிமா அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்
80 மற்றும் 90 காலகட்டங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரேவதி தனது சினிமா அனுபவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
மண்வாசனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரேவதி அதன்பிறகு அந்த காலகட்டத்தில் இவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
நடிகை ரேவதி கூறுகையில் நான் தேர்வு செய்து நடித்த அனைத்து படங்களும் எனது விருப்பத்தின் பெயரில் தேர்வு செய்யப்பட்டவை அல்ல எனக்கு பிடிக்காத படங்களில் என்னை கட்டாயப்படுத்தி நடிக்க வைத்தனர்.
அதனால் நானும் நடித்தேன் அந்த படங்கள் வெற்றி பெற்றாலும் எனக்கு மிகுந்த மன வலியை கொடுத்தது வாழ்க்கையில் மிக மோசமான காலகட்டம் அது.
எனக்கு சினிமா பிடிக்கும் சினிமா நடிப்பை பணம் சம்பாதிக்கும் தொழிலாக மட்டும் நான் பார்க்கவில்லை அப்படி இருந்தால் எனது பார்வை எப்போ மாறி இருக்கும் இப்பொழுது படங்களில் நடிக்கும் போது கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்து வருகிறேன்.