மையோ சிட்டிஸ் நோயிலிருந்து குணமடைந்த நடிகை சமந்தா
மையோ சிட்டிஸ் நோயிலிருந்து குணமடைந்த நடிகை சமந்தா மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு வெளிப்படையாக பேசியுள்ளார். நான் சினிமாவில் நுழைந்த போது பல நிறுவனங்களில் என்னை விளம்பர தூதராக நியமித்தனர்.
புகழும் அங்கீகாரமும் கிடைக்கிறது என்பதால் அதை நான் ஏற்றேன் நான் பொதுவாக ஒரு பொருளை விளம்பரம் செய்வதற்கு முன்பாக அது தொடர்பான வல்லுநர்கள் மற்றும் டாக்டர்களிடம் கலந்து ஆலோசித்த பிறகே நடிப்பேன்.
நோய் பாதிப்பில் இருந்த பொழுது என்னால் விளம்பரங்களில் நடிக்க முடியவில்லை கிட்டத்தட்ட 15 நிறுவனங்களின் வாய்ப்பை நான் நிராகரித்தேன்.
அவர்களின் விளம்பரங்களில் நான் அடித்திருந்தால் கோடி கோடியாக சம்பாதித்து இருப்பேன் ஆனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை என்று சமந்தா கூறினார்.