கணவரால் அனுபவித்த கொடுமை…. குழந்தைகளுடன் தனித்து வாழும் நடிகை சசிகலா
எண்பதுகளில் பிரபல நடிகையான இவர் ஹிந்தி..யில் இருந்து தமிழுக்கு வந்தவர், பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். நடிகை சசிகலா திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார். இவர் கணவரின் கொடுமையால் அவரைப் பிரிந்து தற்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் பிறந்த சசிகலாவை இயக்குனர் மணிவண்ணன் இளமை காலங்கள் என்ற படத்தில் தமிழில் அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் படமே செம்ம ஹிட் கொடுத்தால் பட வாய்புகள் குவிய தொடங்கியது. இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்று நூத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கில் ஏற்கனவே சசிகலா என்ற நடிகை இருந்தால் ரஜினி என்று பெயரை மாற்றிக் கொண்டார்..1983…னில் திரையுலகில் நுழைந்தவர் அடுத்தடுத்து பலருடன் உண்டான கிசுகிசு…வால் 1993… னில் சினிமாவை விட்டு விலகினார். இவர் 1998 ஆம் ஆண்டு டாக்டர் முள்ளகிரி பிரவீன் என்பவரை திருமணம் செய்த பிறகு மூன்று படங்களில் நடித்தார், அதன் பிறகு நடிப்பதை முழுவதுமாக நிறுத்தி விட்டார் .இவருக்கு ஒரு மகன் இரண்டு மகள்கள் என்று மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.இவரது கணவர் நடிகையை திருமணம் செய்து கொண்டோம் என்ற பெருமைபட்டவர் நாட்கள் செல்ல செல்ல இவர் மீது சந்தேகம் ஏற்பட்டு இவரை டார்ச்சர் செய்ய தொடங்கி விட்டார்.
ஒன்பது வருடங்களில் 10 தடவையாவது தற்கொலை…இக்கு முயன்று இருப்பேன், கடைசி நேரத்தில் உயிர் பிழைத்து என் குழந்தைகளுக்காக மனம் மாறி வாழ்கின்றேன், என் மேல் இருந்த வெறுப்பை என் குழந்தைகளிடமும் கணவர் காட்ட தொடங்கினார், எங்களை அவர் என்றுமே விரும்பியதே இல்லை என்னை ஒரு atm machine…னாக தான் பார்த்தார். மனம் நொந்து போய் தன் கணவரை விவாகரத்து செய்ததாக நடிகை சசிகலா தன் பேட்டியில் கூறி இருக்கிறார். இவர் கணவரை பிரிந்து மூன்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வருபவர் நடிப்பில் ஆர்வம் இல்லை என்று கூறினார்.