in

கணவர் இல்லாமல் திருமண நாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதி

கணவர் இல்லாமல் திருமண நாளை கொண்டாடிய நடிகை ஸ்ருதி

சன் டிவியில் நாதஸ்வரம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியா.

அதன்பிறகு அவர் நடித்த எந்த சீரியலும் சொல்லி கொள்ளும்’ படி இல்லை. திடிரென்று அரவிந்த் என்பவரை திருமணம் செய்தவர் துரதிஷ்டவசமாக திருமணமான ஒரே ஆண்டிலேயே அவரது கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அந்த வலியில் இருந்து மீண்டு வந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் லட்சுமி என்ற சீரியலில் ஸ்ருதி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இரண்டாவது திருமண நாளை கணவர் இல்லாமல் கேக் வெட்டி கொண்டாடியதாக இன்ஸ்டாவில் உருக்கமான பதிவுடன் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார்.

அந்தப் பதிவில் முதல் முறையாக நீ என்னோடு இல்லாமல் இந்த திருமண நாளை நான் கொண்டாடி இருக்கின்றேன் இந்த உலகம் நீ இல்லாமல் திருமண நாளை கொண்டாடுகிறேன் என்று என்னை ஏசினாலும் நீ எப்பொழுதும் என்னோடு ஒவ்வொரு தருணத்திலும் இருந்து வழிகாட்டுகிறாய் என்ற நம்பிக்கையோடு வாழ்கிறேன் நாம் கனவு கண்ட வாழ்க்கையை வாழ்வேன்.

இன்றும் முழு மனதுடன் உன்னை நேசிக்கிறேன் மறுபுறம் உன்னை சந்திக்க காத்திருக்கிறேன் . நான் அழுவது உனக்கு பிடிக்காது என்று தெரிந்ததால் புன்னகையுடன் இந்த திருமண நாளை கொண்டாடி உனக்கும் திருமண வாழ்த்துக்களை கூறுகின்றேன் என்று பதிவிட்டுள்ளார். நம்மையும் கண்கலங்க வைத்துவிட்டார்..

What do you think?

நடிப்பதா? விலகுவதா? விரையில் அறிவிக்கிறேன்

இந்தியன் 1 ரீ…ரிலீஸ்…இத்தனை மொழிகளிலா?