நடிகை சோனா தர்ணா
கவர்ச்சி நடிகை சோனா ஸ்மோக் என்ற வெப் சீரியஸை தானே இயக்கி தயாரித்தும் உள்ளார்.
தனது சினிமா அனுபவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த வெப் சீரியஸ்க்கு பலரிடம் இருந்து மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்க அதனை பல நேர்காணலில் வெளியிட்டு இருக்கிறார்.
தற்பொழுது படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில் பிரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது, திடீரென்று படத்தின் வீடியோவை மேனேஜர் எடுத்து சென்று விட்டதாகவும் தன்னிடம் பண மோசடியும் செய்துவிட்டார் என்று நடிகர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார்.
வீடியோவை மீட்டு தர கோரி நடிகர் சங்கம் அலுவலகத்திற்கு முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
தற்பொழுது நடிகர் சங்கம் தலையிட்டு படபிடிப்பு வீடியோவை மீட்டு சோனாவிடம் ஒப்படைத்து இருக்கிறது, தனக்கு உதவிய நடிகர்கள் நாசர், விஷால் மற்றும் கார்த்திக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை சோனா.