நடிகை சௌந்தர்யா…வை திட்டம்மிட்டு கொலை செய்திருகிறார்கள்
நடிகை சௌந்தர்யாவுக்கு விபத்து ஏற்படவில்லை திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று போலீசில் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார், புகழின் உச்சியில் இருக்கும் பொழுது பாஜக கட்சியில் சேர்ந்தவர் தேர்தல் பிரச்சாரத்திற்காக பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்றபோது ஹெலிகாப்டர் பழுதாகி மரணம் அடைந்தார்.
இவர் இறந்து 20 வருடங்கள் கழித்து இது விபத்து அல்ல திட்டமிட்டு சதி செய்து கொலை செய்திருக்கிறார்கள் என்று சத்யநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஏதுரு கட்லா சிட்டிபாபு என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் நடிகை சௌந்தர்யாவிற்கு ஹைதராபாத் ஷம்ஷாபாத் அருகே ஜல்பள்ளியில் ஆறு ஏக்க நிலம் இருந்தது அந்த நிலத்தை தனக்கு விற்கும்படி Tollywood ஸ்டார் மோகன் பாபு வற்புறுத்தி வந்தார்.
சௌந்தர்யாவும் அவரது சகோதரர்களும் அதற்கு உடன்படவில்லை இதனால் அவர்களின் குடும்பத்தின் மீது மோகன் பாபு வன்மத்துடன் இருந்தார். தேர்தல் பிரச்சாரத்திற்கு பெங்களூரில் இருந்து சகோதரருடன் ஹெலிகாப்டரில் புறப்பட்ட சவுந்தர்யாவை விபத்து என்ற பெயரால் கொலை செய்ய திட்டமிட்டனர்.
அதன் பிறகு 6 ஏக்கர் நிலத்தையும் மோகன் பாபு ஆக்கிரமித்து விட்டார் அந்த நிலத்தை அ பறிமுதல் செய்து ராணுவ வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகார் தற்பொழுது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இவரின் புகாருக்கு சௌந்தர்யாவின் கணவர் ரகு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மோகன் பாபு…வை எனக்கு 25 ஆண்டுகளாக தெரியும் எங்கள் இருவர் குடும்பமும் ஒருவர் மேல் ஒருவர் மரியாதை வைத்திருகிறோம். தவறான தகவல் பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.