in

நடிகை சுகாசினி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்

நடிகை சுகாசினி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்

 

நடிகை சுகாசினி கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை வெளியில் சொல்ல கூச்சப்பட்டு இத்தனை வருடமாக மறைத்ததாக கூறியுள்ளார்.

ஹோம்லி நடிகையான சுகாசினி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்தவர் இவர் ஹீரோயின் மட்டும் அல்ல கதை திரைக்கதை எழுதுவதிலும் வல்லவர் மணிரத்தினம் இயக்கிய எல்லா படங்களிலும் கூட இருந்து இயக்கியவர்.

இவர் இயக்குனர் மணிரத்தினத்தை 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் இவர் தனக்கு ஆறு வயதாக இருக்கும் பொழுது காச நோய் பாதிப்பு இருந்ததாகவும் பின்னர் அதற்கான சிகிச்சை எடுத்த பிறகு சரியாகி விட்டதாக கூறினார்.

ஆனால் 36 வயதில் மீண்டும் காச நோயால் பாதிக்கப்பட்டு உடல் எடை குறைந்து காதும் சரியாக கேட்காமல் ஆறு மாதத்திற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்.

வெளியில் சொன்னால் அசிங்கமாகவும் கௌரவ பிரச்சனை ஆகும் என்று அதனை தான் மறைத்ததாக கூறியுள்ளார்.

இப்பொழுது அது பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவே வெளிப்படுத்தி இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

What do you think?

சிறந்த நடிகைக்கான விருதை பெற்றிருக்கிறார் நடிகை மஞ்சிமா 

தேவூர் ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்