அல்லு அர்ஜுன், அட்லீ..யுடன் இணையும் நடிகை
புஷ்பா 2 வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன் இயக்குனர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸுடன் இணைய திட்டமிட்டிருந்தார்.
இருப்பினும், சில தாமதங்கள் காரணமாக இப்போது அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் இணைகிறார்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜூனியர் என்டிஆரின் தேவரா படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடையே பரிச்சியமாவிட்டார் ஜான்வி கபூர்.
புச்சி பாபு சனா இயக்கும் ராம் சரணின் வரவிருக்கும் படத்திலும் ஜான்வி நடிக்க உள்ளார்.
மற்றொரு செய்தியில், இயக்குனர் அட்லீ ஒரு அதிரடி படத்தை எடுக்க சல்மான் கானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இப் படத்திற்கு தற்காலிகமாக A6 என்று பெயரிடப்பட்டுள்ளது.