in

வீட்டை விற்ற நடிகை த்ரிஷா

வீட்டை விற்ற நடிகை த்ரிஷா

 

தமிழ் சினிமாவில் தற்போது வரை முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்தை யாருக்கும் விட்டு கொடுக்காமல் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் த்ரிஷா கடைசியாக GOAT படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தெறிக்க விட்டிருகிறார்.

தற்போது விடாமுயற்சி மற்றும் Good Bad Ugly படத்தில் அஜீத்..இக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

சுமார் 25 வருடங்களாக இந்திய திரையுலகில் பயணித்து வரும் நடிகை த்ரிஷா ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.

கமல்ஹாசன் நடிக்கும் “ThugLife ” படத்தில் நடிக்க நடிகை த்ரிஷா சுமார் 12 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் வசித்து வந்த வீட்டை த்ரிஷா காலி செய்து தற்போது வேறு இடத்திற்கு சென்று விட்டார்.

அவர் வீட்டை நடிகர் Banu Chander வாங்கியிருக்கிறார். தெலுங்கு திரைப்படங்கள் மூலம் கலை உலகில் அறிமுகமானவர் பானு சந்தர். 1980ல், பிரபல இயக்குனர் பாலுமகேந்திரா இயக்கிய “மூடுபனி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவரது இளைய மகன் டாக்டரேட் முடித்துள்ளார், மூத்த மகன் தற்போது தெலுங்கு திரையுலகில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

What do you think?

ஜெயம் ரவி….க்கு எதிராக வலுக்கும் கண்டனம்…ஆர்த்திக்கு பெருகும் ஆதரவு

பாளையங்கோட்டை அருள்மிகு இராஜகோபால சுவாமி திருக்கோயில் திருப்பவித்ரோஸ்தவம்