in

14 வருட நண்பருடன் விரைவில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம்

14 வருட நண்பருடன் விரைவில் நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு திருமணம்

நடிகர் சரத்குமார் மற்றும் முதல் மனைவி மாயாவின் மகளான நடிகை வரலட்சுமி கடந்த 2012 ஆம் ஆண்டு போடா போடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் கடைசியாக தெலுங்கு பாடமான அனுமான் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

இவர் தற்பொழுது தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ராயன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் மும்பை தொழிலதிபரான நிக்கோலாய் சச்தே என்பவரை விரைவில் திருமணம் செய்ய உள்ள நிலையில் மும்பையில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நிக்கோலாய்க்கு ஏற்கனவே திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்ற நிலையில் அவருக்கு 15 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது.

வரலட்சுமியும் நிக்கோலாவும் 14 வருடங்களாக பழகி வந்த நிலையில். இவர்கள் இருவருக்கும் மார்ச் 1ஆம் தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்தத்தின் போது மோதிரம் மாற்றிக் கொண்டனர்.

இவர்களது திருமணம் விரைவில் அறிவிக்கப்படும் என்று வரலட்சுமி கூறியுள்ளார்.

What do you think?

உறுப்பினர் சேர்க்கை ஆரம்பம் … விமானத்தில் வாக்கு சேகரிப்பா?..

ஏன் மக்கள் எவ்வளவு கேவலமாக இருக்கிறார்கள் ….சீரியல் நடிகை தீபா கண்ணீர் போஸ்ட்