in

நடிகை வைஜயந்திமாலா நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம்


Watch – YouTube Click

நடிகை வைஜயந்திமாலா நலமுடன் இருக்கிறார், வதந்திகளை நம்ப வேண்டாம்

பிரபல நடிகையும் நடனக் கலைஞருமான வைஜயந்திமாலா பாலியின் குடும்பத்தினரும் நெருங்கிய நண்பர்களும் அவரது உடல்நிலை குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் சமீபத்திய வதந்திகளை மறுத்து, அவர் “நல்ல ஆரோக்கியத்துடன்” இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

“டாக்டர் வைஜயந்திமாலா பாலி நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார், பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா உடல் நலக்குறைவால் காலமாகி விட்டதாக சமூக வலைத்தளத்தில் வரும் வதந்திகள் குறித்து வைஜயந்திமாலாவின் மகன் சுசீந்திர பாலியின் மனைவி நந்தினி பாலி Instagram பக்கத்தில் பகிர்ந்ததாவது.

அவர் நல்ல உடல் நல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் அவரைப் பற்றிய வரும் செய்திகள் உண்மை அல்ல செய்தியை பகிர்வதற்கு முன்பு தயவு செய்து சரி பாருங்கள் ஆதாரமற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

ஜனவரி 18 அன்று வைஜயந்திமாலா தான் பாடிய கர்நாடக இசையமைப்பான தாசிகனுந்தத்தை ஆபேரி ராகத்தில் நிகழ்த்தும் வீடியோவை வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சி சென்னையில் உள்ள கலா பிரதர்ஷினியில் நடந்தது.


Watch – YouTube Click

What do you think?

ரத்த புற்று நோய்…யால் போராடும் கராத்தே உசேனி… கடைசி ஆசையை நிறைவேற்ற கோரிக்கை…

இன்க்ரெடிபிள் இந்தியாவைப் போல, நானும் இன்க்ரெடிபிள் இளையராஜா”…