அம்பானி மகன் திருமணத்தில் வைரத்தை தொலைத்த நடிகை
முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொண்டபோது வைரத்தை இழந்ததாக பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
முகேஷ் அம்பானியும் நீதா அம்பானியும் கடந்த ஆண்டு தங்கள் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்தை நடத்தினர்.
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ஜூலை 12, 2024 அன்று மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் உலகின் மிகவும் பிரபலமான ஃபேஷன் செல்வாக்கு மிக்க நடிகை கிம் கர்தாஷியன் மற்றும் அவரது சகோதரி க்ளோ கர்தாஷியன் கலந்து கொண்டனர்.
‘கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்கள்’ நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோடில், கிம் மற்றும் க்ளோ ஆகியோர் தங்கள் இந்திய வருகை மற்றும் அம்பானியின் திருமணத்தில் கலந்து கொண்டது பற்றி பேசினர்.
அம்பானி யார் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்களுக்கு சில பொதுவான நண்பர்கள் தெரியும். அவர்களில் ஒருவர் நகை வடிவமைப்பாளரான லோரெய்ன் ஸ்வார்ட்ஸ்.
அம்பானியின் மகனின் திருமணத்திற்காக அவர் நகைகளை வடிவமைத்திருந்தார். அவர் மூலமாகவே அம்பானி குடும்பத்தினர் எங்களைத் தொடர்பு கொண்டனர்.. திருமணத்தில் அவர்களுக்கு ஒரு சோகமான சம்பவம் நடந்ததாக பகிர்ந்து கொண்டனர்.
அம்பானியின் மகனின் திருமணத்தில் கலந்து கொண்டபோது தான் அணிந்திருந்த வைர நெக்லஸிலிருந்து ஒரு வைரம் விழுந்து தொலைந்து போனதாக கிம் கர்தாஷியன் கூறியுள்ளார்.
வைரம் எங்கே போனது என்று தெரியவில்லை. அதைத் தேடிய பிறகும் கண்டுபிடிக்க முடியவில்லை. வைரத்தின் மதிப்பு பல லட்சம் என்று கூறப்படுகிறது. வைரத்தை இழந்தது தனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது என்று கிம் கர்தாஷியன் கூறியுள்ளார்.