ஆதிக் ரவிச்சந்திரனை கைது செய்ய வேண்டும்
குட் Bad Ugly படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனை கைது செய்ய கோரி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது .
மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் ஆதிக் இயக்கத்தில் அஜித்குமார் மற்றும் த்ரிஷா நடிப்பில் GBU ஏப்ரல் 9ஆம் தேதி வெளியானது.
இதுவரை 250 கோடி ரூபாய்க்கு மேல் வாசுல் செய்து வருகிறது .
தமிழ்நாடு நடுத்தர மக்கள் சங்கத்தின் சார்பாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது அந்த புகாரில் GBU படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் வரும் காட்சிகளில் பெண்களுடன் உலாசமாக நடனம் ஆடும் பாடல்களில் இயக்குனர் சமூக அக்கறை இல்லாமல்’ பெண்களை இழிவாகவும் அதிக கவர்ச்சியாகவும் காட்டி இருக்கிறார்.
எனவே அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து பதிவு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண்களை இழிபடுத்தும் விதமாக அமைந்துள்ள காட்சிகளை படத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.